என்னவனே
என்னவனே...
அனதன்புக் காதலனே.......
இனியஎன் நண்பனே......
நீ என்னை
நேசிப்பது தெரிந்தும்
உன்னை பிடிக்காதது போல்
நான் நடிப்பது பொய்..!
நீ என்னை
பார்க்கும் போதெல்லாம்
நான் முகத்தை திருப்பியது
உன்னை பிடிக்காததால் அல்ல...
உன் விழி அம்பின்
தாக்குதலிலிருந்து
தப்பித்துக் கொள்வதற்காக..!
நீ பேசும் போதெல்லாம்
நான் மவுனம் சாதிப்பது
உன்னை பிடிக்காததால் அல்ல...
உன் பேச்சில்
மயங்கி நிற்பதால்..!
நீ புன்னகைக்கும் போதெல்லாம்
நான் தலை கவிழ்வது
உன்னை பிடிக்காததால் அல்ல...
உன் புன்னகையை நிரந்தரமாக்க
திட்டம் தீட்டுவதால்..!
நீ காதலை
புரிய வைக்கும் போதெல்லாம்
நான் புறமுதுகிடுவது
உன்னை பிடிக்காததால் அல்ல...
என் தோல்வியை
ஒப்புக் கொள்வதால்..!
இப்படி
நமக்குள்
தினம் தினம் நடக்கும்
இந்த
காதல் யுத்தம்
ஒருநாள் முடிவுபெறும்..!
அப்போது
உன் ஆயுள் கைதியாய்...
என்னை சிறையெடுக்கும்
உன்னிடம்
நான் சொல்லப் போகும்
ஓர் உண்மையுண்டு...
அது -
நான் உன்னை காதலிக்கிறேன்...!