எனக்கு பிடித்த சேலையில் நீ
![](https://eluthu.com/images/loading.gif)
எனக்கு சேலை கட்டினால்
பிடிக்கும் என்பதற்க்காக
உன்னை ஒவ்வொரு நாளும்
கட்டச்சொல்லி கேட்பேன்
உனக்கு சேலை பிடிக்காது என்பதற்க்காக
கட்ட மறுத்து
ஒத்தி வைத்திடுவாய்.!
இன்று எனக்கு பிடித்த சேலையில் இருக்கிறாய்
ஆனால்?
அதை பார்த்து ஆனந்தபட
வேண்டிய நான் அழுகிறேன்
உன் திருமண மேடையில்
உன் சேலை முனை
உன் கணவரின்
வேட்டி முனையுடன்
இணைக்க பட்டிருப்பதைக்கண்டு...!