மண்சோறு அவை !
![](https://eluthu.com/images/loading.gif)
இரவலுக்கு மரணம் தரும்
இறுகிய மனதவளுக்கு,
கருகினேன் மனதளவுக்கு !
சொற்களை கூராக்கி
உயிரை இரண்டாக்கி
சிதறும் செவப்பில்
குளிர் காய்கிறாள் !
வழியும் காதலை
வாறி எடுத்துக்கொண்டு,
எடுத்ததை மறைத்துக்கொண்டு
மன்றாடும் பெண்டவள் !
மரணிக்கும் நிமிடங்களிலும்
நிற்குமளவு காதலை நட்டுவிட்டு
எழுந்து போகிறாள் விட்டுவிட்டு !
என்னிதயச்சுவர் முழுதும்
கைரேகை பதிய வரைந்துவிட்டு
போயிருக்கிறாள் - மரணம் வரை
எனக்கான மண்சோறு அவை !