ரசத்து வண்டல்
முன்குறிப்பு: உப்பு சப்பில்லாத விஷயத்தை ரசமாக எழுத முடியுமா என்ற என் முயற்சியின் விளைவே இந்த ரசத்து வண்டல் விஷயம் .
ரசத்து வண்டல் என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது மன்னி தான். மன்னி என்பது என்னுடைய பாட்டி. அம்ம்மாவோட அம்மா. புதிய தலைமுறை ரசத்து வண்டல் பற்றி அவ்வளவாக அறிய வாய்ப்பு இல்லை. எனென்றால் இது பிஸ்சா பர்கெர் காலம்.
வீட்டில் எல்லோரும் சாப்பிட்டவுடன் கடைசியில் சாப்பிடுவது (அந்த காலத்தில்) அம்மா பாட்டி போன்றவர்கள் தான். மற்றவர்கள் சாப்பிடும்போது நமக்காக சமைத்தார்களே , அவர்களுக்கு சாப்பிட எதாவது கொஞ்சமாவது மீதம் வைக்கவேண்டும் என்று நினைக்காமல் வெளுத்து கட்டுவார்கள். அவர்களை சொல்லியும் குற்றமில்லை. ஏனன்றால் அம்மா பாட்டி சமையல் அவ்வளவு நன்றாக இருக்கும்.
ஆகையால் எல்லோரும் சாப்பிட்டவுடன் அம்மா பாட்டி தனிமையில் உட்கார்ந்து சாப்பிடும்போது (குறிப்பாக வீட்டில் உள்ள ஆண்கள்)யாருமே பக்கத்தில் வந்து அவர்களை கவனிக்க மாட்டர்கள்.அவர்களும் அதை எதிர்பார்க்க மாட்டார்கள் . கூட்டு, பொரியல், அவ்வளவாக இல்லயென்றால் அதை பற்றியும் கவலைப்படாமல் சுட்ட அப்பளம் தயார் செய்துகொண்டு சாப்பிட உட்காருவார்கள்.
இலையில் சாதம் ரசத்துவண்டல் மேல் நன்றாக நிறைய நெய் ஊற்றி பிசைய ஆரம்பித்தவுடன் எங்கிருந்தோ இரண்டு பேர் வந்து எனக்கு ஒரு உருண்டை கொடேன் என்றுகேட்டு, நாலு உருண்டையாக சாப்பிட்டு விட்டு ரொம்ப சுவையாக இருக்கு என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள்..அப்ப கூட பாவம் இவர்களுக்கு ஒன்றும் இல்லை என்று நினக்கமாட்டர்கள்.
இந்தமாதிரி சில காரணங்களால் எனக்கு ரசத்துவண்டல் சாப்பிட பிடிக்காது . ஆனால், அம்மா கிட்ட கேட்டால் அதெல்லாம் ஒன்னும் கிடையாதுஎன்பாள்.
ரசத்துவண்டல் நல்ல மஞ்சள் நிறத்துலே, கொஞ்சம் சிகப்பா .நிறைய பருப்போடகொத்தமல்லி கருகபிலையோட பார்க்கவே பிராமதமா. நல்ல வாசனையோட இருக்கும். அரிசி சாதத்தோட நெய் ஊத்தி பிசையும் போது பிரமாதமா இருக்கும். சிலர் அதில் உள்ள கொத்தமல்லி, கருகப்பிலை, புளி சக்கை, கொத்தாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து, ஒரு புழி,பிழிஞ்சு, சாரை, சாத்துல, பிழிந்து கொண்டு , அப்பளம், ஊறுகாயோட அல்லது .மாவடுகூட சாப்பிடும்போது, அலாதி ருசியாக இருக்கும். சாயங்கால டிபன்லே, அடை, தோசை,உப்புமா,இட்லி எதாக இருந்தாலும் ரசத்த்துவண்டலுடன் சேர்த்து சாப்பிட்டால் அது தனி டேச்டுதான்.
அம்மாகிட்ட ரசத்து வண்டல் பற்றி கேட்டேன். அம்மா உடனே, அந்தகால ரசத்துவண்டல் பிரமதாமாக இருக்கும். காரணம் நிறைய பருப்பு போடுவார்கள் . ரச பாத்திரத்தில், பாதிக்குமேல, பருப்பு இருக்கவேண்டும் அப்பத்தான் ரசத்து வண்டல், நன்றாக அமையும் என்றாள். மோர் சாதத்திற்கு கூட, ரசத்துவண்டல் பிரமாத காம்பினஷன்.சிலபேர் சுவரஸ்யமா அதை கைல ஒரு வாய் எடுத்து ஊறிஞ்சி சாப்பிடுவதை பார்க்க எனக்கு பிடிக்கும் ..
எல்லாருக்கும் அவ்வளவாக ரசிக்காத , தெளிவு ரசம் எனக்கு மிகவும் பிடிக்கும் .. அதுவும் எலுமிச்சை பழ ரசம் எனக்கு மிகவும் பிடித்தது. சாதத்தோட தெளிவு ரசம் விட்டு பிசைந்து , மேல பொரிச்ச உளுந்து அப்பளம் போட்டுண்டு , அது ஊறியவுடன் , சாப்பிட்டால் , அது மாதிரி டேஸ்ட் அபாராம்.
தெளிவு ரசம் எக்ஸ்பெர்ட் என்னைபொறுத்தவரை மன்னியை தவிர ரெண்டு பேர். பேரு சொல்லமாட்டேன் . ஏனன்றால் வம்புல மாட்டிக்க, அடிவாங்க இஷ்டமில்லை.
பின் குறிப்பு : நான் எழுதின ரசத்து வண்டல் விஷயம் தெளிவா இல்லன்னா , அதுக்கு காரணம் எனக்கு ரசம் தான் பிடிக்கும். , , , , , . . . . .