சம்மதிப்பாயா?
உனக்காக புகை பிடிப்பதை நிறுத்தினேன்!
முகம் மலர்ந்தால் என் அன்னை!!
உனக்காக மது அருந்துவதை நிறுத்தினேன்!
முகம் மலர்ந்தால் என் அன்னை!!
உன்னை காதலிககிறேன் என்றேன்!
முகம் சுருங்கினால் என் அன்னை!!
உன்னை மறந்துவிடுகிறேன் என்றேன்!
முகம் மலர்ந்தால் என் அன்னை!!
எனக்காக அனைத்தையும் இழந்தவள்!
அன்னைக்காக உன்னை இழந்தது!!
சமன் செய்ய நினைகிறேன் அன்னை இழந்தவைகளை - சம்மதிப்பாயா?