இறைவா நீ எங்கே

இறைவன் ஒன்று உண்டென்று
எடுத்துச் சொன்னா அம்மா
காட்டச் சொல்லி கேட்டாக்க
கோவில் கூட்டிச் சென்று நின்னா

கற்சிலைகள் தெய்வமென்று
கும்பிட்டது ஒரு கூட்டம்
காணவில்ல இறைவனங்கு
கண்டு கொள்வது என் நாட்டம்

அலை பாயும் மனசக் கொஞ்சம்
அடக்கி வைக்கும் வழி தான்
தெய்வமென்ற கற்சிலைகள்
சொல்லும் மொழி அது தான்

கேட்டதெல்லாம் தெய்வம்
தந்தா நாத்திகமே இல்ல
இந்தப் பொய்ய சொல்வது தான்
ஆத்திகத்தின் தொல்ல

நமக்குள்ளே உள்ள இறைவன்
தேடி கிடைக்க மாட்டான்
நாளும் ஒரு யாகம் செஞ்சா
சூடிக் கொடுக்க மாட்டான்

உள்ளிருக்கும் தெய்வத்த
உணர்ந்தாத்தான் புரியும்
உண்மை, அன்பு, பாசத்தில
உறைவது அது தெரியும்

நல்ல மனம் வள்ளல் குணம்
இறைவன் வாழும் கோவில்
இல்லம் தோறும் வாழும் அதத்
தேட வேண்டாம் வாழ்வில்

எழுதியவர் : நா.kumar (9-Nov-12, 4:34 pm)
Tanglish : iraivaa nee engae
பார்வை : 191

மேலே