பட்டதாரி நடிகர்கள்

சாப்பிடாத வயிறு
சாப்பிட்டதாக வாய் .
சிரிக்காத உள்ளம்
சிரிக்கின்றதாய் உதடுகள் ...
துவைக்காத சட்டை
துவைத்து போல பெர்ப்யும் ...
பணம் இல்லாத சட்டை பைகள்
ஆனால் பணம் இருப்பது போல
வீட்டில் இருக்கும் ஏடிம் கார்டு பர்சுகள்.......
கண்கள் நிறைய கண்ணீர்
கொத்தடிமைகளாகும் வேலை .....
இதற்கிடையில் தவறாது அழைக்கும்
அம்மாவின் அலைபேசியில்
கசிந்து கொண்டிருக்கும் கண்ணீரில்
சளி பிடிச்சிருக்கும் மா,,,,,அதான்....
நேரத்துக்கு சாபிட்ரேன்........சாப்பாடு நல்லா இருக்கு மா ....நல்ல பெரிய ரூம் மா .....
உடம்ப பர்த்துக மா..........
இரண்டு நாள்ல பணம் அனுபுறேன் !!
கடன் தொகையில் புதிதாய்
அடுத்த இரண்டாயிரம் அம்மாவுக்கு...(காக)

எழுதியவர் : ஸ்ரீ raam (9-Nov-12, 5:11 pm)
சேர்த்தது : srimother
பார்வை : 167

மேலே