உன் சுயம் அறி! சுடர்விடு!

என் இனிய
இளைஞனே!
சற்றே கவனி
உற்றே நோக்கு!


வெறுப்பின்
அம்சமில்லை
வாழ்க்கை
நெருப்பின் அம்சம்!

உன் சுயம் அறி
அதில் நீ
சுடர்விடு!
திக்கு திசையற்று
தீனர்களாய்
திரிவதில் பயனுண்டோ?

எத்திக்கும்
உன் பெயரை
உச்சத்தில்
உச்சரிக்க
வேண்டாமா?

முடியாது என்பது
முட்டாள்களின்
வார்த்தை
எதற்கும் முயற்சி செய்
இன்றேல்
பயிற்சி செய்

ஒவ்வொரு உயிரின்
முயற்சியே
அதன் வாழ்வின்
மலர்ச்சி

உன் மனதை
ஆழ உழு
செவிகளை
கொஞ்சம்
அகலத்திற

விழிகளை
இன்னும்
விரித்தே வை

கேள்,
வெற்றி ஒன்றும்
கம்பசூத்திரம் அல்ல

நல்லவை நாடு
அல்லவை அகற்று
சொல்வதை செய்
செய்வதை சொல்

உலகம் உன்
சட்டைப் பையில் விழும்!

-- பேனாமுனை பாரதி

எழுதியவர் : பேனாமுனை பாரதி (10-Nov-12, 4:47 pm)
பார்வை : 207

மேலே