பாரதி
மீசை வைத்த குழந்தை நீ
தமிழ் மண்ணில் பிறந்த தலைவன் நீ
கவியாய் பிறந்த கலைஞன் நீ
தமிழ் அன்னை தாலாட்டிய இளைஞன் நீ
கவி பாடி பாரதி எனப் பெயர் பெற்றாயே
கவியின் தலைவன் எனப் புகழச் செய்தாயே
தமிழ் மாந்தரின் நெஞ்சில் தஞ்சம் கொண்டாயே
கவியின் மூலம் அந்நியனை வெளியெறச் செய்தாயே
தலை பாகை அணிந்த தலைவா உன்னை இம்மண் எப்படி மறக்கும்?