!!!===(((துப்பல் துளிகள்)))===!!!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
* என் வாழ்க்கை
* இருளில்தான்...
*
* என் விடியலை
* மறைத்து வைத்திருக்கும்
* உன்
* விழிகள் திறக்கும்வரை...!!!
*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
* என் நிலவரை கதவுகள்
* தாழ் விலகும்....
*
* உன் தாமரை
* முகம் மலரும்
* ஒவ்வொரு தருணங்களும்...!!!
*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
* உறவென்று சொன்னால்
* பிரிந்துவிட கூடுமென்றுதான்
* உயிரென்று சொல்கிறேன்...
*
* இனி மனிதர்களுக்கு சாத்தியமில்லை
* நம்மை பிரிப்பதற்கு...!!!
*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
* விடிந்துவிடுமோ...
* என்ற கவலையில்தான்
* விழுந்து கிடக்கிறேன்...
*
* நிலவாகவும் கனவாகவும்
* என்னோடு நீ
* இணைந்திருக்கும்
* இந்த இரவு...!!!
*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
* எப்பொழுதாவது நீ
* என்னை
* நினைப்பாய் என்றுதான்
* எப்பொழுதும் உன்னை
* நினைத்துக்கொண்டே இருக்கிறேன்...!!!
*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
* கனவு கண்களுக்குத்துனை
* என் கனவுகளுக்கு நீ ---- !!!
*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
* புரிந்துகொள்ள முடியாத
* புதிர்தான் நீ
* ஆனாலும்
* எனக்கு புதையல்...!!!
*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
* இரவு கருமையானது
* என் இதயம் வெள்ளையானது...
*
* உன்னை வரைகிறேன்,
* இரவின் நிறமெடுத்து
* இதயத்தில்...!!!
*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
* கனபொழுதின்
* கண் சிமிட்டல்...
*
* என்னுள் மூளும்
* மின்னதிர்வு...!!!
*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (13-Nov-12, 11:27 am)
பார்வை : 187

மேலே