தீபாவளி ஞாபகங்கள்
தீபாவளி வரும் நாளை
தினமும எதிர்பார்த்திருந்து
கனவுகளை நனவாக்க
விரைவாக விழித்தெழுந்து
எண்ணை இட்டு தலை குளித்து
எடுத்த புது சட்டை போட்டு
நடுத் தெருவில் நண்பரோடு
சர வெடிகள் வைத்து விட்டு
தாய் செஞ்ச இனிப்புகளும்
தனிச் சுவையாய் கார வகை
வடையோடு இட்டிலியும்
வகை வகையாய் சாப்பிட்டு
அக்கம் பக்க வீடுகட்கு
இனிப்பும் காரம் கொடுத்துவிட்டு
அக்கடான்னு உட்கார்ந்து
பட்டிமன்றம் பார்த்துவிட்டு
நாளெல்லாம் உரையாடி
ராத்திரிக்கு காத்திருந்து
ராக்கெட்டு புஸ்வானம்
மத்தாப்பில் மிதந்திருந்து
உளம் களித்து உடல் களைக்க
உறங்கப் போன சின்னப் பையன்
பத்து வயது ஞாபகங்கள்
மறப்பதற்கு மறுப்பதேங்க?