theepath thirunaal vaazhththukkal.........!!!

காலைக் கதிரவனின்
அழகு ஒளி
கண்சிமிட்டும் மழலைகளின்
புன்னகையில் சின்ன ஒளி
காதலர்கள் கண்களிலே
ஆசை ஒளி
பெற்றெடுத்த அன்னையரில்
அன்பு ஒளி
உலாப்போகும் சந்திரனின்
தண்மை ஒளி
வீடு எங்கும் பிரகாசிக்கும்
இந்த ஒளி
மக்கள் வாழ்வு தனில்
இன்பம் தர வந்த ஒளி
இது தமிழ் உள்ளங்களில்
சந்தம் தீட்டும் ஞான ஒளி
மனம் கொண்டுள்ள
அசுத்தங்களை ஒழிக்க வந்த தீப ஒளி
நாம் அனைவருமே ஆதரிக்கும்
தீப ஒளி.......(தீபாவளி..........)