எனது கழிப்பறைகள் கட்டுரையை படித்துவிட்டு என்னுடைய தங்கை விஜயலட்சுமி ராமசந்திரன் எழுதிய கருத்துகள் கவிதையாக !
எனது கழிப்பறைகள் கட்டுரையை படித்துவிட்டு என்னுடைய தங்கை
விஜயலட்சுமி ராமசந்திரன் எழுதிய கருத்துகள் கவிதையாக !
கிராமம் என்றால் நம் ஊரில்
நதிக்கரை ஓரம் குளக்கரை ஓரம்
ஒதுங்கி கொள்வோம் மறைமுகமாக....
கவலையில்லை கை கால் கழுவ
மீன்கள் வருமே சுத்தம் செய்ய
நகரம் வந்தோம் நதியும் இல்லை குளமும் இல்லை
பாத்ரூமுடன் பள்ளியறை பரபரப்பான காலை நேரம்
காலிசெய்வோம் வயிறை என்றால்
“வெஸ்ட்ரன்’ என்ற வழக்கமில்லா சங்கடம்
சங்கடத்தில்” சரி செய்து கொள்வோம் சுகமாக
உட்கார்ந்து எழமுடியாத ஏக்கத்தில்
ஏசுவோம் இந்திய கழிப்பறை கட்டுமானத்தை
----------
யூ எஸ் வந்த மறு நாளே
மரத்தால் ஆன வீடு என்றே
மறந்தும் தண்ணீர் சிந்தாமல்
புழங்க வேண்டும் பாத்ரூமில்
பேசினை பளிச்சென்று துடைத்து
பாத்டப்பில் இறங்க் வேண்டும்
வெது வெதுப்பான நீரில் குளித்து
தேய்த்து அலம்பி பேசினை
பூஜை செய்யும் முறையாக
துலக்க வேண்டும் முடிவாக
அனைத்து மேக் அப் கம்ப்ளீட்டா?-கூந்தல்
சிதறாமல் துடைக்க வேண்டும் சீராக
,
அன்றில் அண்டை வீட்டில் அலாரம்தான்
அபார்ட்மெண்ட்டில் கம்ப்ளெயிண்ட்தான்