கண்ணசைப்பது எப்பொழுது
ஆழ்ந்த அமைதியான குளத்தினுள்
ஆணவமாய் சிரித்தது முழு நிலா.
அசைத்த இளம்தென்றல், நீரலைகொண்டு
நிலாமகள் நிழலை சிதறி இரைத்திருந்தது.
இனிமையாய் ஆடிடும் காதலை,
நினைவலைகள்கொண்டு சிதறடிக்கும்
காதலியே, நிஜ அலைகளை தொடுத்து
கைபிடித்துக் கண்ணசைப்பது எப்பொழுது.