பட்டிமன்றம்
பட்டி மன்றத்தில்
பகுத்தறிவு
பலவான்கள் !
வெட்டி பலர் !!
ஒட்டி பலர் .!!
விளம்பரங்களில்
பணம் சேர்க்க
தொலை காட்சிகளின்
கூட்டு சதி !!
டீவி புகழ்களாய்
வலம்வருவார்கள்
சாவி பொம்மைகளாய்
வாய் திறப்பார்கள்
சிந்தனைகளிலே
துளியூண்டு ஊறுகாய் .
மனித நேரங்கள்
மரணித்த நேரங்களாய்!!
பண்டிகைநாட்களின்
பலகார கூட்டாய் !!
கை நிறைய காசு
காசுக்கேத்த பேச்சு
பொழுது போக்கு
கூட்டணி
கழுத்தறுக்கும்
ஓர் பணி
எங்கோ படித்ததை
இங்கே படிப்பார்கள் !
பலகார வார்த்தைகளாய் !!
பலன் என்று
யோசித்தால்
நேரத்திருட்டு
மட்டுமே!!