எவரும் நிச்சயம் வாசித்து மகிழ வேண்டிய படைப்பு-21

தோழமைகளே...
எவரும் நிச்சயம் வாசித்து மகிழ வேண்டிய படைப்புகள் வரிசையில் 21 -ஆவது படைப்பு...

தோழர்கள் எவரும் பரிந்துரை செய்யலாம்..... இப்படித்தான் நாம் நமது பரிந்துரைகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் அல்லவா..

வாசித்து தோழர் எஸ்.எம் ஆனந்துக்கு வாழ்த்துகள் கூறலாம்..



நிலவு!
வானக் கடலில்
தினமும் நீந்தும்
வெண்ணிலாவே!

விண்மீன் பிடிக்க
நீ வீசிய வலையில்
என் கண்மீன்களையும்
களவாடிவிட்டாயே!

வானக் கடலில்
வலம் வரும் நீ
எங்கள் கடலில்
ஏன் எதிரொலிக்கிறாய்?

தங்க நிறத்தில்
தக தகக்கும்
வட்ட நிரப்போட்டே!

மாதம் ஒரு நாள்
நீ மறைந்து
வானத்தாயைக்
கைம்பெண் கோலம்
காண வைப்பது ஏன்?

மேகத்திரைகளுக்குப்பின்
ஓடி ஒளிந்து விளையடுகின்றாயே!
நீ என்ன வயசுக்கு வந்த
கிராமத்துப்பெண்ணா?

எழுதியவர் : எஸ்.எம்.ஆனந்த் (13-Nov-12, 3:22 pm)
பார்வை : 169

மேலே