என் உயிர் தோழிகள் 555
தோழிகள்...
துன்பங்கள் பல
வந்த போதும்...
சூரியனை கண்டு
விலகும் பனித்துளிபோல்...
மறைகிறது துன்பங்கள்
என் தோழிகளை
நான் காணும் போது...
முட்கள் நிறைந்த பாதையில்
நான் நடந்தபோதும்...
முட்கள் தைக்கவில்லை
என் பாதங்களை...
என் தோழிகளின் கைகள்
என்னை தாங்குவதால்...
பிடிக்கவில்லை
இந்த வாழ்க்கை...
கடக்க சொன்னார்கள்
கற்களும் முட்களும்
நிறைந்த பாதையை...
அழகிய நந்தவனம்
கண்டேன் அங்கே...
எனக்கு வாழ்கையை
உணர்த்தியவர்கள்...
என் தோழிகள்...
இன்று நட்பு என்னும்
அழகிய நந்தவனத்தில்...
நான் என் தோழிகளுடன்.....
என் உயிர் தோழிகள்(MATSKUG )சமர்ப்பணம்.....

