மண்ணில் கண்ட விண்மீன்கள்

இரவு நேரம்... இருள் சூழ் வேளை ...
ஏறிய மலையின் உச்சியில் நின்று
நிலமகள்தன்னை எட்டி நோக்க
விண்ணில் விரவும் வெள்ளி மீன்களெல்லாம்
மண்ணில் சிதறி வைரமாய் ஒளிர்ந்தபடி... ...

என்ன விந்தை?... என்ன விந்தை?...
எண்ணி எண்ணி வியந்து போகிறேன்
மாய வித்தையா?.. மந்திரம் செய்தனரா?

வினாக் கொண்டே விழிகள் விரித்து
விண்ணை நோக்க
அங்கும் விண்மீன்கள்....
கண்சிமிட்டியே ஒளிர்ந்து வானில்
உள்ளேன்... உள்ளேன்...
என்றே உரைத்திட
மண்ணில் விண்மீன் வந்ததெப்படி?

விடிய.. விடிய வினாக் கணைகள்
விடிந்ததும் தெளிந்தது...
விடையும் கிடைத்தது...
மண்ணில் அணைந்தது மின்விளக்குகள்
மறைந்தது மிண்ணிய விண்மீன்கள்

எழுதியவர் : சொ. santhi (16-Nov-12, 10:58 pm)
பார்வை : 126

மேலே