எப்படி.. சபிப்பது.....

குப்பை தொட்டிகளில்
பொறுக்கித் திண்பர்
வீசியெறியப்பட்ட
மனித நேயம்.....
..................................................
கடவுள் பெயரில்
யாசிப்புகள்
மதங்களால் கைவிடப்பட்ட
கடவுளின் குழந்தை...
...............................................................
யாருமே
அனாதையில்லை
எல்லோரும் மலடுகள்
கையேந்தும் சிறுமி
.......................................................
சில்லறைக்கு
உள்நுழையும் விரல்கள்
கிழிசலுக்குள் ஊடுறுவும்
வக்கிரக் கண்கள்
ஓட்டை விழுந்த இதயம்
.......................................................
படிக்கட்டுகளின்
பட்டினிக் கூக்கூரலில்
கண்ணீர் விடுமா
புடைத்த
கோயில் உண்டியல்.
....................................................
கருணையை கழட்டிவிட்டு
காலணியை அணியும்
தருமம் தொலைத்த கால்கள்
கூனிக்குறுகும்
வேதநூல்கள்
.................................................................
தருமம் தொலைத்த கால்களின்
முதுகில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
நிராகரிக்கப் பட்ட
தொழுகைகள்
.............................................
எப்படி சபிப்பது
ஈயார் தேட்டை
தீயார் கொள்வர்,,

எழுதியவர் : sindha (17-Nov-12, 11:11 pm)
பார்வை : 166

மேலே