!!!===(((தூவானத் துளிகள்)))===!!!

பிள்ளைவரம் கேட்டு
கோவில் கோவிலாக
அலைகிறவர்களின் கண்களுக்கு
ஏனோ புலப்படவில்லை..!

''குப்பைத்தொட்டி''

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

உரசும்வரை
உறங்கிக்கொண்டுதான் இருக்கும்,
ஒளிரும்வரை
இருள் சூழ்ந்துதான் கிடக்கும்..!

''தீக்குச்சி''

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

குழந்தைகள் இனி
அம்மா... என்று
அழைப்பதற்கு பதிலாக,
ம்மே......... என்று
கத்தினாலும்
ஆச்சர்யபடுவதற்கில்லை..!

''புட்டிப்பால்''

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

ஓட்டு என்பதுதான்
நமது ஆயுதம்,
ஆனாலும் அது
நமது கைகளில்
வெறும் அட்டை கத்தியாய்...!

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

விலைவாசியாம், விற்பனையாம், வளர்ச்சியாம்,
இனி
காற்றையும்
விலைகொடுத்து வாங்கி
சுவாசிக்க தயாராகுங்கள்..!

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (18-Nov-12, 12:55 pm)
பார்வை : 146

மேலே