அன்னையின் எச்சரிக்கை
ஜனனம் கண்டு தன் மடியில்
தவழும் மழலைக்கு
அன்னையின் எச்சரிக்கை....
மகனே..!!
நரிகளும் சிங்கங்களும்
ஒன்றாகத்திரியும்
தந்திரமும் பயங்கரமும்
குடிகொண்ட உலகமிது..
பசு என்று நினைத்து அருகில் செல்லாதே
பசிகொண்டு அலையும் சிறுத்தையாகவும் இருக்கலாம்
பதுமை என்று நினைத்து தொட்டுப்பார்க்காதே
விஷம் பாச்சும் முள்ளம்பன்றியாகவும் இருக்கலாம்
சுவையான கதை கண்டு ஏமார்ந்து போகாதே
உன்னை சுவைக்க துடிக்கும் நரியாகவும் இருக்கலாம்
அழகை ரசிக்கிறேன் என்று அலட்சியம் கொள்ளாதே
கணப்பொழுதில் சீறும் அரவம் ஆகவும் இருக்கலாம்
எச்சரிக்கைகொள் மகனே..!!
கள்ளம் கபடம் இல்லா உன்மனதில்
அத்தனையும் கொண்டு சேர்க்க
ஒரு கூட்டம் தொடரும்...
உன் முதுகை படியாக்கி தான் உயர
வழி வகுக்கும் பலபேர் உண்டு
உன் பக்க்ம் இருந்துகொண்டே உனைப்பற்றி
புறம்பேசும் சிலபேரும் உண்டு..!!
அத்தனையும் இனங்கண்டு உன்பெயர்
நிலைக்க- நீ தொடங்கவேண்டும் ஒரு பனிப்போர்..
அன்னை நான் இருக்குமட்டும் தூண்போல்
உனைக்காப்பேன்- என் வாழ்வு முடிவு கண்டால்..??
எச்சரிக்கை கொள் மகனே..!!