ஆசான்
ஓ..........
நீ என்ன
அலிபாபாவின் ஆசானா?
அவன் கற்குகையை அல்லவா
நகர்த்தினான்.
நீ
என் உள்ளக்கதவை அல்லவா
தகர்த்தாய்?
எங்கிருந்து கற்றாய் இந்த
தாரக மந்திரத்தை?
நொடி தவறாமல் - என்
நாடி நரம்பெல்லாம் உன்
நினைவும் ..................
நீக்கமற நிறைந்து
சப்தமின்றி சங்கமித்து
சல்லாபம் செய்கிறதே
மிடுக்காய் தான் உறவாடுகிறேன்
எதிர்பாலரோடு .......................
நான் என்ற இறுமாப்போடு
அல்ல...
உன்னிலும் சிறப்பாய்
என்னை வெல்வார் யார்
என சோதித்தறிய முயலுகின்றேன்.
கரையை கை சேர எத்தனிக்கும்
அலையாய்..................
என் முயற்சி
எத்தனையோ தரிசனங்கள்
தரிசித்தும் உன்னையன்றி
எதுவும் மோட்சம் தரவில்லை
என் பெண்மையின் அகத்திண்மைக்கு
உன் தரிசனமோ........
தரிசு நிலத்து வெள்ளமையாய்
எனக்குள்
உன்னை களை என்றன்னி கூட
கழற்றி எறிய மறுக்கிறது மனசு.
ஐயப்பட்டு..............
ஆராய தேவை இல்லை- நீ
என் உளங்(கொன்ற)கவர்ந்த
ஆசான்தான்.