குழந்தை ஓவியம்

அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
கோணலாய் -சற்று
குறுகலாய்

வளைந்தும்
நெளிந்துமாய் -சற்று
ஒளிந்துமாய்
தெரிந்தும்
தெரியாத-எழுத்தெல்லாம்

தன்
மொழியில் –தட்டி
தடுமாறி
தவழ்ந்து -வருகிற
தாய்மொழி

என்
மழலை - கை
வண்ணத்தில்
ஓவியமாய்

என்
சுவற்றில்

எழுதியவர் : gcranjith (18-Nov-12, 11:56 am)
சேர்த்தது : gcranjith
பார்வை : 142

மேலே