உள்ளத்தின் கவிதைகள்.
உள்ளத்திற்குள் ஊற்றாய் பொங்கி வரும் கவிதைகள்,
கண் அசைவில் நின்று நினைவுகள் கோர்க்கும்,
காலடியில் அமர்ந்து ஆர்வமாய் கதை பேசும்,
உதட்டசைவில் அமர்ந்து கானம் பாடும்,
கை அசைவில் அமர்ந்து ஓவியம் தீட்டும்,
நினைவில் அமர்ந்து காலம் அழியா காவியம் ஆகும்.