வரம்

என் இதயம் பிரிந்தாலும்
அதில் உன் நினைவு என்னைவிட்டு பிரியா வரம்வேண்டும்..!!
என் கனவினில் நான்மறந்தாலும்
உன் கனவினில் நான் மறக்காவரம்வேண்டும்..!!
என் கண்ணில் என் உருவம் மறைந்தாலும்
உன் கண்ணில் என் உருவம் மறையாவரம் வேண்டும்..!!
என் விரலோடு உன்கரம் விலகினாலும்
உன் விரலோடு என்கரம் விலகாவரம்வேண்டும்
என் இதயத்தின் ஓசை நின்றாலும்
உன் இதயத்தில் என் நினைவுஓசை
பிரியா வரம் வேண்டும்..!!

எழுதியவர் : மைதிலிசோபா (20-Nov-12, 8:13 pm)
சேர்த்தது : mythilisoba
Tanglish : varam
பார்வை : 226

மேலே