முபீஸ் பிறந்த நாள்
உதய சூரியனின் புரட்சி
விடிகாலை உலகுக்கு எழுச்சி
எங்கள் இளைய சூரியனின் மலர்ச்சி
எங்களுக்கு மகிழ்ச்சி
எங்கள் குடும்ப சோலையில்
இரண்டாவதாக மலர்ந்த
இனிய ரோஜா
எங்கள் முபீஸ் பாஷா
நீ
எங்கள் இதய சாம்ராஜ்யத்தில்
என்றென்றும் மகாராஜா
நீ
சிரித்தால் தங்கம்
சினந்தால் சிங்கம்
சேமிப்பதில் குருவி
செலவழிப்பதில் அருவி
வாழ்க்கை அச்சகத்தில்
உருவான வாரிசு புத்தகம்
வளரும் தலைமுறைக்கு
பேர்சொல்லும் பெட்டகம்
உன் பிறந்த நாள்
எங்களுக்கு உகந்த நாள்
உன் வயதின் ஆரம்பம்
எங்களுக்கு பேரின்பம்
நீ
அன்பின் முகவரி
அறிவில் புதுவரி
பண்பில் தேன்மழை
பாசத்தில் வான்மழை
உன்னை வாழ்த்த
உள்ளத்தில் உவகை மழை
நீ
என்றும் வாழ்க வளமுடன்
வல்லோன் துணையுடன்
t