மீண்டும் மீண்டும் கீழ்வெண்மணி-முதுகுளத்தூர்
சாதி பார்த்து
மதம் நோக்கி வருவதல்ல - காதல்
இயற்கைக்கு மாறுபட்டா
நிலாவும் சூரியனும்
வெளிச்சம் தருகின்றன?
காதலில் சதிசெய்து
மோதலில் முடிக்க வைப்பது யார்?
புலப்படாத- புலன்களற்ற புல்லுருவிகளுக்கு
அறிவு வெளிச்சம் எனும்
பரந்த மனம் பறந்ததெங்கே?
அரும்பி மலர்ந்த காதலை
விரும்பி அரவணைக்காமல் - நீங்கள்
அறிவு கொளுத்தும் அறச்செயலை விடுத்தீர்
ஊரையே கொளுத்திய உன்மத்தர்களே......
பெயரைக் கெடுக்க வந்த பெற்றோர்களே ....
இன்னுமா தணியவில்லை சாதி வெறி ?
என்று தணியுமிந்தச் சாதி வெறி ?
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார்...
நன்றே செயமன மில்லாதார்
கொன்றே போட்டார் மனிதநேயத்தை!
பேருந்தோடு கொளுத்தினர் பெண்களை
தர்ம புரியா?
அதர்ம புரியா?
இப்போதும் தர்மபுரியில் தர்மமில்லை....
எப்போதும் வேண்டாம் தரணியில் எங்கும்
மதமும்
மதமும் என்று ஒழியும்?
மீண்டும் ஒரு முதுகுளத்தூர்....
மீண்டும் ஒரு கீழ்வெண்மணி...
மீண்டேழுமா சாதி வெறியற்ற சமூகம்?
வெகுண்டெழ வேண்டாமா சமதர்ம சமூகம்?