கண்ணீர்

கண்ணீரே கண்ணிரே

கண்ணீரின் அர்த்தம் அறிந்தவர் யார்

நிறம் இன்றி இருப்பதால் கண்ணீரின்
தன்மை தெரிவதில்லை

நிறம் இருந்தால் கண்ணீரின் வகையை பிரித்திடலாம்

சுகத்திலும் கண்ணீர்
துக்கத்திலும் கண்ணீர்

நிஜ கண்ணீர் நீலி கண்ணீர்

ஆணின் கண்ணீர் பெண்ணின் கண்ணீர்
குழந்தையின் கண்ணீர்
இது உறவுகளின் கண்ணீர்

பாசத்திலும் கண்ணீர்
நட்பிலும் கண்ணீர்
காதலிலும் கண்ணீர்

இணைந்தாலும் கண்ணீர்
பிரிந்தாலும் கண்ணீர்

கண்ணீரில் வெளிப்படும் அன்பு
கண்ணீரில் ஏற்படும் பாசப்பினைப்பு

கண்ணீர் கண்ணீர் கண்ணீர்

இது கண்ணீரல்ல

உறவுகளின் உயிர் நீர்

கோவை உதயன்

எழுதியவர் : கோவை உதயன் (21-Nov-12, 12:30 pm)
Tanglish : kanneer
பார்வை : 275

மேலே