பாவாட தாவணியில்

பாவாட தாவணியில்
பதவிசா நானிருக்க,
“கூவாகம்” போறவள
குறுகுறுன்னு பாக்குறியே.
பொம்பள மனசுஇது
பொல்லதத நெனக்குது
எல்லாம் தெரிஞ்ச நீ
ஏதேதோ நெனக்கிறே!.

கால் தூசி எங்காச்சும்
சப்பரமா மாறிடுமா?
சால்ஜாப்பு ஏதாச்சும்
சொல்லிவிட்டு போய்டுவியா
முள்ளு எங்காச்சும்
மலருன்னு கேட்டாக்க
வெள்ள மனசிருந்தா
நம்பிக்கிட்டு போவாங்க.

எல்லாம் படிச்ச நீ
எங்கிட்ட ஏன் வந்த
பொல்லாப்பு வந்திடுமே
பொதகுழிதான் நமக்கு.
பொம்பள சிரிச்சா போச்சு
பொகையெல விரிச்சா போச்சு!

என்ன மறந்துடுன்னு
சொல்லவும் முடியலயே
ஒன்னோட நெனப்பாலே
ஒடிசலா போறேனே.
கண்ணாலம் கட்டிக்கிட்டா
ஒன்னத்தான் கட்டிக்குவேன்
இல்லேன்னா இந்த
கத்தியால வெட்டிக்குவேன்.

எழுதியவர் : தா.ஜோசப் ஜூலியஸ் (21-Nov-12, 1:32 pm)
பார்வை : 195

மேலே