நாம் விட்டுச் செல்ல வேண்டிய சொத்து !!
வளர்ந்து தேய்ந்து
இதத்தைப் பரப்பும்
அருமை நிலவு ..
மொட்டு அவிழ்ந்து
வண்ணத்தைப் பூசிக்கொண்டு
ஆனந்தமாய் குலுங்கும் பூக்கள் ..
துளியாய் விழுந்து
ஒன்று கூடி
குளிர்ச்சியூட்டி
குதித்து ஓடும் அருவி..
குட்டி குட்டி கையாட்டி
கொட்ட கொட்ட பார்த்து
வெகுளியாய் மலரும்
மழலைச் சிரிப்பு ..
ஆயிரம் கோடி
ரகசியங்கள் பேசி
கண்சிமிட்டி
மிளிரும் நட்சத்திரங்கள் ..
அனைவரும் உறங்குக
நானும் உறங்குகிறேன்
என மலையில்
ஒளிந்து கொள்ளும் சூரியன் ..
நீல வானத்தைப்
பிரதிபலித்துக் கொண்டே
அவ்வானத்தை தூரத்தில்
தழுவிக்கொள்ளும் கடல் ..
உணவையும்
பசுமையையும் அள்ளித்தந்து
பச்சை படுக்கையாய் கிடக்கும்
மலையோர வயல்வெளி..
வண்ணங்களை உமிழ்ந்து
விந்தையைத் தூண்டிவித்து
கண்ணுக்கு விருந்தளிக்கும்
மனித கண்டுபிடிப்புகள் ..
இவை
கண்களுக்கு
படைக்கப்பட்ட
விருந்தல்லவோ..
இதனை
ருசித்து
ரசித்து
பரவசம்
அடைய முடியாக்
கண்களுக்கு
ஒளி தருவோம்
வாருங்கள்..
நாம் விட்டுச் சென்ற
சொத்தாக
நம் கண்கள் இருக்கட்டும்...