சின்னஞ்சிறு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா!
உன் கொஞ்சும் விழிகள் என்னை பார்க்க
என் கெஞ்சும் உள்ளம் உன்னையே கேட்கின்றது!
உன் மழலை அழகை வர்ணிக்க
வார்த்தையின்றி தவிக்கின்றது!
உன் பிஞ்சு கைகள் என் கழுத்தை சுற்றாதோ
நீ சிந்தும் செல்லச் சிரிப்போடு எனக்கு முத்தம் தாராயோ-என
கைகள் உனை அள்ளி அணைக்க நீட்ட முன்
உனக்கும் எனக்கும் உள்ள தூரம் தடுக்கிறது!