விவசாயி
விவசாயியின் வியர்வைத்துளி மழை நீர் தேக்கமானது
வியர்வைத்துளித்த விவசாயியின் வயிறு கொதித்தபோது
மின்சாரம் உருவாகியது, உருவான நெற்க்கதிர் வளைந்து
விளையும் நேரம் வானம் பொத்து கொண்டு மழை
பொழிய மழை நீரால் விளைந்த பயிர் அழிய ஆங்கே
உயிர்கள் உண்ணாவிரதம் இருந்தன வறுமை விரதம் பூண்டது
பசிக்கொடுமை அங்கே அனைவரையும் ஆண்டது ,
பட்டதெல்லாம் போதும் என்றே பட்டண்ம் வந்தான் விவசாயி
வானம் உயர்ந்த கட்டடம் கட்டுவதற்கு சேய் கைகொடுக்க
செங்கல் அடுக்க அருமை மனையாள் உடனிருக்க உயிர் வந்தது
கிடைச்சா கஞ்சித்தண்ணீர் கிடைக்காட்டா குழாய் தண்ணீர்
இருப்பது இருக்கையிலே என்னாத்துக்கு கவலை கண்ண்ணீர்
கவிஞரின் வரிகள் என் ஞாபகத்திற்க்கு வருகிறது