அங்காடி

மால் என்றால் திருமால், பெருமாள் மட்டுமில்லை அங்காடி
என்றும் தமிழில் சொல்வார்கள், சமீபகாலமாக அனைவரும்
தெருக்கோடிகளில் இருக்கும் சில்லறைக்கடைகளில் சாமான்
வாங்குவது இல்லை, ஒரு நெருப்பு பெட்டி வாங்குவதானால்
கூட மாலுக்குச்சென்று அங்கே இருக்கும் கூடையில் நெருப்பு
பெட்டியை போட்டுக்கொண்டு பில் கவுண்ட்டரில் கிரெடிட்கார்டு
கொடுத்து வாங்குவதை விரும்புகிறார்கள்,விலை விசாரிப்பது
பேரம் பேசும் சுவாரசியம் இல்லாமல் சாமான்களில் போட்டு
இருக்கும் விலையை கொடுத்து வாங்குவார்கள்,பொழுதுபோக்க
செல்லும் இடமாக ஆகிவிட்டது மால்,

இப்போதெல்லாம் அனேகமாக குறைந்தது 30,000 ரூபாய்
சம்பளம் வாங்குகிறார்கள்,அதனால் அதற்க்குத்தகுந்தாற்போல்
வாழநினைக்கிறார்கள் , சில்லறை கடைக்காரர்களும்
இப்போதெல்லாம் விலை நிர்ணயித்துவிடுவதால் பேரம் செய்யும்
வியாபாரம் குறைந்துவிட்டது, சாமான்கள் ஓரளவிற்க்கு சுத்த
பத்தமாகவும் இருக்கு, இப்படி ஒருவர் கருத்துக்கூறினார்,

மாலை”ச்சுற்றிகொண்டு இருந்தேன், அங்கே விற்க்கும் சாமான்கள்
ரகரகமாக என்னைக்கவர்ந்தன, இந்தமாத பட்ஜெட் இவ்வளவுதான்
அதற்க்குள் முக்கியமானவற்றைமட்டும் வாங்கு என்று கணவன்
சொல்லியதை மனைவி தலையை ஆட்டி கேட்டுக்கொண்டதோடு
சரி மாலில் இருக்கும் சாமான்களின் கவர்ச்சியில்மயங்கி ஆறு
மாத பட்ஜெட் சாமான் வாங்கிக்கொண்டு,ப்ளீஸ் கொடுத்துடுங்க
என்று கொஞ்சியதை பார்த்து எனக்கு “அய்யோ” என்று இருந்தது
மால் செய்யும் மாயம் என்று நினைத்துக்கொண்டேன்,

ஒவ்வொரு தெருவுக்கும் மால் போன்ற அங்காடி கடைகள்
வந்தாச்சு. கூடையை குழந்தையின் கையில் கொடுத்து சாமான்களை
பையில் போட்டுக்கோ வேணும்கறதை வாங்கிக்கோ என்கின்றனர்
பெற்றோர், குழந்தைக்கு கடையில் சாமான் வாங்க, பில்லுக்கு
பணம் கொடுக்க என்று பழக்குகிறார்கள் பெற்றோர்,கூட்டி வரும்
நாயும் மாலில் இருக்கும் கூடையில் சாமான்களை சேகரித்து
கவுண்ட்டரில் பணம் கொடுத்து பில் வாங்கும்,பலசரக்குகள்போட்டுவைக்க
விதவிதமான ப்ளாஸ்டிக்டப்பாக்கள் இலவசமாக கிடைக்கிறது என்றால்
நாம் வாங்கும் சாமான்களில் டப்பாக்களின் விலையும் சேர்ந்ததுதானே?

வாசலில் வரும் கருவேப்பிலை கொத்தமல்லிக்கு அரிசி போட்டு
வாங்குவோம்,கறிகாய்கடைகளில் பேரம் பேசி ஒரு கிலோவிற்க்கு
விலை விசாரித்து மனதில் கணக்குப்போட்டு வாங்கும் சுவாரசியம்
தனிதான், ஒவ்வொரு கடைகளிலும் ஒவ்வொருவிலை எங்கே
எட்டணா குறைவு என்றாலும் அங்கே செல்வோம்,பால் கணக்கு
எழுதியே சுவரெல்லாம் கறுப்புஆக ஆகிவிடும், அப்பளமாவிலிருந்து
அனைத்து மாவுகளும் ரெடியாக கிடைத்துடுகிறது கடைகளில்இப்போது,,
முன்னே எல்லாம் அரிசி பருப்பு தவிர வேறு எதுவும் கடைகளில்
இருக்காது, நல்ல ரகமான சாமான்கள்கிடைக்க தேடி தேடி வாங்குவோம்
சமையல் செய்து சாப்பிடும்போது கறிகாய்கள் எந்த எந்த தோட்டம்
ஊரிலிருந்து வந்தவை என்பதை கண்டுபிடித்துவிடுவோம், அரிசியின்
தரம் தெரிந்து வாங்குவோம், நெய்யும் அப்படியே, இப்போ கம்பெனி
ப்ராண்ட் பார்க்கிறோம், அன்று சுவை உணர்ந்தோம்,இன்று சுவை
மறந்தோம்,நெய்யின்னா மணலா இருக்கும், மல்லிப்பூ அன்னம்
குழையும்பருப்பு, மருந்து வாசனை வராத காயும் கனியும், இலையில்
என்ன பரிமாறுகிறார்கள் என்று பார்க்க நேரம் இல்லாமல் சாப்பிடும்
இன்றைய மனிதர்கள், மாலுக்குபவிஷூவந்ததால்அர்த்த ராத்திரியிலும்திறந்து
அரண்மனை வரவேற்புதான்,காய் கறிகள் வாங்கியபிறகு கொசுறு
கொத்தமல்லி கருவேப்பிலைகிடைக்குமா இனி? வெங்கலப்பானை
ஈயச்சொம்பு, கச்சட்டி,முறையே ரசம்,வத்தல்குழம்பு,வெண்பொங்கல்
இவற்றை இன்றும்குறைவான பேர்களே உபயோகிக்கிறார்கள்,இந்த
வகை பாத்திரங்களைவாசனைக்காக உபயோகித்தோம், இப்போது
கிச்சனை அழகுபடுத்த புதியவகை பாத்திரங்கள் வந்துவிட்டன,

மண்பானை சமையல் செய்தால் ஆரோக்கியமென்றாலும்,கவர்ச்சியான
வடிவில்மண்பாத்திரங்கள் செய்வதால் ஆரோக்கியத்தை சாக்கு சொல்லி
வாங்கி அவற்றில்சமைக்கிறார்கள், இரும்பு பாத்திரம்,இலுப்பச்சட்டியும்
அப்படியே,தக்காளியை ரசத்தில் மட்டுமே ஒருகாலத்தில் சேர்ப்பார்கள்,
தக்காளி வெங்காயம் பூண்டு உருளை சேர்க்காமல் எந்த சமையலும்
இல்லை என்றாகிவிட்டது, கோதுமை இன்றைய பெண்களின் கைகளில்
படாதபாடு படுகிறது, தினுசு தினுசாக உருட்டி,சுருட்டி,மடித்து, சதுரம்
வட்டம், கோணம், எப்படிவேணும்னாலும்வளைக்கமைதா, கோதுமைஇருக்கு
என்று சொல்லுமளவில்,பிரியாணிஅரிசி தம் பிடித்து தம்பிடித்து வேகாமல்
விரைச்சுபோய் நம் வயிற்றில் அப்படியே தம் ஆகிவிடுகிறது,ரசம்பொங்கி
வரும் நேரம் இறக்கினா வாசனை! “யார் அப்படி சொன்னா?பொங்காமாலே
வாசனையாத்தான் இருக்கும்,சாம்பாரில் பருப்பு நிறையபோட்டு குழைவா
செய்யணும், “அப்படி யார் சொன்னா? பருப்பு கொஞ்சமா போட்டாலும்
ந்ன்னாத்தான் இருக்கும், நிறைய இப்படியான எதிர்வாதங்கள்சமையலில்
புரட்சி உண்டாக்கிவிட்டது, வேகாமலே காய்களை பச்சையாகசாப்பிட
சாலட், பழங்களை வைத்து விதவிதமான வகை சாலட் சாப்பிடுங்கள்
ருசிக்கு இல்லை என்று வயிற்றுக்கும் ஈயப்படும் என்று ஆகிவிட்டது,
நோய்களின்கொடுமைக்குஆளாகி வாய்க்கு பூட்டுபோடும் நிலை,

ருசியானசமையல். அறுசுவை,உங்கள்வீட்டுசமையல், இப்படி பல
பெயர்களுடன் எல்லா சானல்களும் சமையலை செய்து காட்டி
இல்லத்தரசிகளின் பர்ஸை பதம் பார்க்கிறது, பன்னீர், கோவா,
நட்ஸ், நவீன சோயா பருப்பு உருண்டை, இப்படி இத்யாதி
வகையறாக்கள், ந்வீன சமையல் பலசரக்குகள், அதாவது மசாலா
பொடி வகைகள், அனைத்தும் விலை ஏற்றமாக உள்ள சாமான்கள்
இஞ்சி பூண்டு விழ்து, போன்ற் விழுது வகை என்று ரெடிமேடாக
ஏகமாக விலைக்கு வாங்கி ப்ரிஜ்ஜில் அடுக்கி ப்ரிஜ் நாறி போகும்
அளவிற்க்கு சேர்க்கிறார்கள்,

கம்பு கேழ்வரகு, இயற்கை உணவு என்று பழைய கிராமத்து
சமையல்களுக்கு ஹோட்டலை வைத்து நிறைய காசுபார்க்கின்றனர்
சிலர், விலை குறைவாக தோட்டத்தில் விளைந்தவை இன்று
விலை ஏற்றமாகிவிட்டன், முருங்கை இலை, வ்ல்லாரை இன்னும்
பல கீரைகளும் பழ்ங்களும், கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தது,
இன்று கிடைப்பதே அரிதாகிவிட்டது, இவற்றின் மகத்துவம்
தெரிந்தவுடன் தேடிஅலையும் பரிதாபம் இன்றைய தலை முறைக்கு
வந்தாகிவிட்டது,


நோட்டு நோட்டாக சமையல் குறிப்பு சானல்களை பார்த்து
எழுதி வைத்துக்கொண்டு சமைத்துப்பார்த்து நன்றாக வரவில்லை
என்றால் அலுத்துக்கொண்டு ச்லிக்கிறார்கள், ஸ்ரீராமஜெயம் எழுதினால்
உபயோகம் என்று நினைக்கத்தோன்றும்,

எழுதியவர் : விஜ்ய்ல்ட்சுமி (22-Nov-12, 11:23 pm)
பார்வை : 318

மேலே