இமயத்தை மிஞ்சும் இந்தியாவின் சவால்கள்
உலகின் மிகப் பெரிய
ஜனநாயகத்தின் முதுகெலும்பில்
வைரஸ் கிருமிகள்...
குடியரசு கூட்டாச்சியில்
கூறுகெட்ட கொள்கைளால்
கூறு படும் அபாயம்...
ஜனநாயகத்தின்
சல்லி வேர்கள்
சாதியிலும், மொழியிலும்
அறுபட்டுக் கொண்டிருக்கின்றன....
இரும்பான
ஆணி வேரும்
இனவாத துருக்களால்
அரிக்கப்படுகின்றன.....
மொழிவாரி மாநிலங்கள்
பிரித்த போதே
பிணைப்பும்
பிசு பிசுத்து விட்டது...
நாம்முடையது என்றதெல்லாம்
எனது உனது
என்றாகிப் போனது...
வேற்றுமையில் ஒற்றுமை
எனும் வேதாந்ததை
வேற்றுமையில் வெற்றி
எனும் சித்தாந்தம்
வென்று விடுமோ.?
தனி மாநில கோரிக்கைகள்
தலைதூக்கும்
தருணங்களில் எல்லாம்
தலைவலி ஆரம்பம்....
இதில்
நியாயங்கள் பல இருப்பின்...
தனி நாடு கோரிக்கை விடும்
தகவலுக்கு
அச்சாரமோ..?
என்ற அச்சமும் வருகிறது....
அண்டை நாடுகள்
சண்டைகளை விடவும்
அண்டை மாநிலச் சண்டைகள்
கருவை கலங்கடிக்கிறது....
இந்தியாவின் சவால்கள்
இமயத்தை விடவும்
உயரமாகிப் போகிறது...
இந்தியா
எனும் பெயர் நிலைக்க
இதயம் இங்கே
இப்போதும் எப்போதும்
பிரார்த்திக்கிறது..