கருத்த கருப்பழகு

கருப்பழகு, கருவிழியும் அழகு,
கூவிடும் கன்னங்கருத்த குயிலழகு,

கருப்புப் பூசிய கடவுளும் அழகு.
கார்கூந்தலின் கருமை ஈர்ப்பழகு.

கருத்துச் சிவந்த கண்ணகி அழகு,
கருப்புச் சேலையில் நீயும் அழகு,

கருப்புப் பணமும், கருப்புலகும்
காண்கையில் மட்டும் ஏன் கனல்?

எழுதியவர் : தீ (23-Nov-12, 8:53 am)
பார்வை : 247

மேலே