தாய் மடி

என்
தங்கைக்கு
ஒரு சங்கடமெனில்
ஆறுதல் தேடுமிடம்
என் தாய் மடி...
எனக்கு
ஒரு கவலையேனில்
கண்கலங்கி
நான் சாயுமிடம்
என் தாய் மடி...
என்
தந்தையில்
மனவுளைச்சலுக்கு
மருந்து தருமிடம்
என் தாய் மடி...
நீ எங்கு
ஆறுதல் பெறுகிறாய்
என தாயிடன்
வினவியபோது
நீ கவிதை எழுதும்
வேலையை பார்
என்கிறாள் என்னிடம்
ஆம்!
கடவுளுக்கு(தாய்க்கு)
ஆறுதல் கூற
நம்மால் முடியுமா என்ன?