புலம்பல்கள் - பகுதி 2 ( ஏமாற்றம்)
ஒரு மனம்
இங்கே
கனவு காண விரைகிறது
சிலரின் அனுமதி பெற்று---
சிலரின் உத்தரவு பெற்று—
சிலரின் ஆதரவு பெற்று—
ஒரு மனம் இங்கே
கனவு காண விழைகிறது!
துக்கங்களை மறந்து விட்டு—
தூக்கத்தை மறுத்து விட்டு—
நிம்மதியை தவிர்த்து விட்டு—
ஒரு மனம் இங்கே
கனவு காண விளைகிறது.
கூட்டில் இருக்கும் வரை—
குஞ்சு பறவைகளே—
சிறகை விரிது பழகி—
அகல அகல விரிக்க பார்த்து-
இடையூறாய் கூட்டை எண்ணி,
வெளியுலகின்
பரந்த நினைவுகளில்-
ஆகாய வெளியின்
பரப்பு அனைத்தையும்
அளக்க எண்ணி,
சிறு சிறகுகளோடு
தனிப் பயணம்
மேற்கொண்டாயிற்று!
திரும்பி வரும்போது
ஏனிந்த சோகநிலை?
ஓ!
கூட்டைக் காணவில்லையா?
பரவாயில்லை!
ஆகாய வெளியில்
எங்கும்
கூடு கட்டி வாழலாம்!
ஓ!
ஆகாய வெளியில்
மிஞ்சியது
வெறுமை மட்டும்தானா?
என்ன செய்வது
காலக் கடிதத்தின்
தாமதக் கரைசேரல்!

