ம. ரமேஷ் சென்ரியுக்கள்

அழாதே பாட்டி
நான் இருக்கிறேன்
முதியோர்இல்லத்தில் பேரன்

கேபிள் ஒயரில்
பயமின்றி நடக்கிறது
பிச்சைக்காகச் சிறுமி

அந்தரத்தில் சிறுமி
தந்தையின் சாட்டை அடி
சமுதாயத்துக்கு

கூரைக்குள் நடந்தால்
சாதனையும் திறமையும்
பேரூந்து நிறுத்தமென்றால் பிச்சை

மாலை குடிப்பதற்காக
வேகமாக வேலை செய்கிறான்
அப்பனுக்காகக் குழந்தை

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (26-Nov-12, 5:55 am)
பார்வை : 173

மேலே