அழுக்குத் துளிகள்-II–கே.எஸ்.கலை
அகவை எய்தா குழந்தை
பசிப் போக்குகிறது தாய்க்கு
பிச்சை !
விரல்களுக்கு அறிவில்லை
சந்தோசமாய் வாழ்கிறார்கள்
அரசியல்வாதிகள் !
வரம்
வழங்கப்படுவது சாபங்களால்...
போலிச்சாமி !
முகவரி தெரியாதவன்
அனாதைப் பட்டம் நீக்கினான்...
விபச்சாரியின் பிரசவம் !
“நான் சொல்வதெலாம் உண்மை”
பொய்யிலேயே தொடங்குகிறது...
வழக்கு !