எண்ணியதுண்டா?

மதங்களின் பின்னால் ஓடும் மானிடரே !
நீங்கள் மனிதத்தைப் பற்றி எண்ணியதுண்டா?
நாம் மனிதத்தைப் பற்றி எண்ணியிருந்தால்
மத(வெறி)ம் நம்மிடையே இருந்திருக்காது....!

சாதியைத் தேடும் சங்கங்களே !
நீங்கள் சாதிக்க எண்ணியதுண்டா?
நீங்கள் சாதிக்க எண்ணியிருந்தால்
சாதி நம்மிடையே இருந்திருக்காது....!

பெண்களின் புறத்தோற்றம் கண்டு ஓடும் மானிடரே
அவர்களின் அகத்தைப் பற்றி எண்ணியதுண்டா?
அகத்தைப் பற்றி எண்ணியிருந்தால்
பெண்ணடிமை நம்மிடையே இருந்திருக்காது....!

தன் தேவைகளைப் பற்றித் தேடுகின்ற மானிடரே!
பிறரின் தேவைகளைப் பற்றி எண்ணியதுண்டா?
பிறரின் தேவைகளைப் பற்றி எண்ணியிருந்தால்
வறுமை நம்மிடையே இருந்திருக்காது....!

முதலில் நம்மைப் பற்றி நாம் எண்ணியதுண்டா?
நம்மைப் பற்றி நாம் எண்ணியிருந்தால் என்றோ
ஆறறிவுள்ள மனிதனாய் இருந்திருப்போம்..!

எழுதியவர் : அருளினியன் (26-Nov-12, 9:58 am)
பார்வை : 160

மேலே