ஒரு உண்மை காதல் வலி கவிதையாய் ....

பனிவிழும் என் காதல் பனித்துளியோ

துளிர்விடும் அழகான புல்வெளியோ

மனம் சொல்லும் என் காதல் தேவதையோ

சொல்லாமல் என் காதல் நான் என்ன செய்வேனோ


கரு கரு உன் விழியால்

துரு துரு துளைகின்றாய்

இருவிழி அகலாமல்

என் உயிர் எடுக்கின்றாய்

உன் உயிர்தான் கொண்டு மறு உயிர் தருகின்றாய்


என்னுயிர் நீதானே பெண்ணே பெண்ணே

உந்தேன் நேசம் தாயின் பாசம்

உந்தேன் நேசம் எந்தன் சுவாசம்

நாளும் வேண்டுமென்று என்று உள்ளம் எங்குமே

ஏங்கி ஏங்கி வைக்கும் காதல்

நீ என்னை தாண்டி போகும் தூரல்

உன்னை தாண்டி ஏது தேடல்

உள்ளம் கேட்குமே

எழுதியவர் : ருத்ரன் (26-Nov-12, 8:28 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 311

மேலே