விடுதலை

மயிலும் மனிதனும் ஒன்று
கிடைத்ததும் கிடைக்கப்பெறாததுமாய் உள்ள
தன் சுதந்திரத்தை காற்றைப்போல சுவாசிப்பவர்கள்!..

இரு நதிகளின் கலக்குமிடம் கலங்கலை கொள்ளும்
அது போல அடிமைதனமும் அடிமையும் சந்தித்தால்?.........................

அடித்தேவை கண்டுணர்வதற்கு முற்பால்
காலநிலையை கண்டுணர்வதற்கு முற்பால்
முதலே மனித இனம் தன்னுள்
வைத்திருந்தது இந்த விடுதலையை!.........................

உயிர் ஈந்தவனும்
உயிர் எடுத்தவனும் வேறு
உயிர் ஈந்தவன் கேட்டது என்னவோ கண்கள்
காணாத, காண முடியாத ஒன்று!.........................

பிறரைக் காடும் கண்களுக்கு தேவையில்லை விடுதலை! ஆனால்
பிறரைக் கண்டுணர வேண்டுமே விடுதலை!...........

மழைக்கு மண்ணிடம் இருந்து விடுதலை உண்டு!
மண்ணிற்கு மழையிடம் இருந்து விடுதலை உண்டா?.....................

மலைக்கள்ளனுக்கு தேனீக்களிடம் இருந்து விடுதலை உண்டு!
தேனீக்களுக்கு மலைக்கள்ளனிடம் இருந்து விடுதலை உண்டா?.....................


பறவைகளுக்கு கிடைத்த விடுதலை ஏன்
பறவையின் சிறகுகளுக்கு கிடைக்கவில்லை?!.......


-விடுதலை வேண்டும் வேந்தர்கள்

எழுதியவர் : வேல் முருகானந்தன்.சி (29-Nov-12, 5:35 pm)
பார்வை : 193

மேலே