கவிதை தாய்!!!
தாயாக நான் இருந்து
சேயாக உன்னை காலமெல்லாம்
காப்பேன் என்று கூறிய நீயே
என் இதயத்தை கிழித்து
காயப்படுத்தி என்னை
தூக்கி எறிந்து விட்டாயே!
என் இதயத்தை காயப்படுத்திய
உன்னை நினைத்து
நான் பரிதாபம் கொள்கிறேன்!
என் வேதனை கண்டு
நீ ஆனந்தம் கொள்ளாதே!
என் வேதனையோ
கவிப்பூக்களாய் மலர்ந்து
என்னை தேற்றும்!!
நீ என்னை விட்டு
சென்றாலென்ன?
என் கவிதை என் தாயாக
என்னுள் இருந்து
என்னை தாலாட்டும்!!!!