நான் ஒரு காதல் தீவிரவாதி!

விழுந்தேன் விழுந்தேன்
காதலில் விழுந்தேன்
காதல்வாதியாக..
இன்று நான்
காதல் தீவிரவாதியாக....
அன்னையின் அன்பு
தந்தையின் துணிவு
ஆசானின் அறிவு
இல்லாளின் இன்பம்
இயற்கையின் செறிவு
நட்பின் பண்பு
நாட்டின் உன்னதம்
இதுதான் உலகில்
உண்மைக்காதல்...!
இந்த உண்மையை
தெரிந்துகொண்டேன்...
இன்று நானும்...
விழுந்தேன் விழுந்தேன்
காதலில் விழுந்தேன்
காதலில் விழுந்ததால்
வாழ்வில் உயர்ந்தேன்!
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு…........(குறள்-72)
(காதல் என்ற சொல் பாலுணர்வு என்பதை மாற்றி அன்பு -நேசம்-பாசம-பற்று என்பதை வலியுறுத்தவே இப்பதிவு. ஏதும் தவறு இருந்தால் மன்நீப்பீராக! )