சட்ட சபையில் சில ருசிகர நிகழ்வுகள்

ஒருமுறை கலைஞர் முதல்வராக இருந்தபோது எதிர் வரிசையில் அமர்ந்திருந்த அ.தி.மு.க.நண்பர் ஒருவர் "எல்லாம் அந்த ஆண்டவனுக்கே தெரியும்"என்று கூறினார். உடனே கலைஞர் சமயோசிதமாக "நான் ஏற்கனவே ஆண்டவன்.என்னை சொல்கிறீர்களா!" என்று கேட்டார்.சபையில் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாயிற்று.

அ.தி.மு.க. ஆட்சியின் போது அப்போது சபாநாயகராக இருந்த டாக்டர் .காளிமுத்து அவர்களுக்கும் ,பேராசிரியர் .அன்பழகன் அவர்களுக்கும் நடந்த விவாதம்.

நீங்கள் என் மாணவர்.நான் உங்கள் பேராசிரியர்.
நான் சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்! என்றார் பேராசிரியர்.உடனே ."ஏன் அய்யா! மாணவர்கள் ஆசிரியர் ஆகா முடியாதா?"
என்று கேட்டார். அதற்கு பேராசிரியர்"மாணவர்கள்
எப்போது வேண்டுமானாலும் ஆசிரியராகலாம்.ஆனால்,ஆசிரியர்கள் மாணவர்களாக முடியாதே!" என்று கூறியவுடன் உறுப்பினர்களின் கைதட்டல் அடங்க வெகு நேரமாயிற்று.

தி.மு.க. முதல் முறை ஆட்சியைப் பிடித்த போது
சட்டசபையில் நடந்த ஒரு நிகழ்வு!

அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காங்கிரஸ் நண்பர் ஒருவர் எது சொல்லவேண்டும் என்றாலும் ஒரு விரலைக் காட்டி "ஒன்னு சொல்றேங்க!ஒன்னு சொல்றேங்க! "என்று கேட்பார்.
இதைத் தொடர்ந்து கவனித்த தி.மு.க. உறுப்பினர் அவரைக் கிண்டல் செய்யும் விதமாக "ஒன்னுக்கு
போகவேண்டும் என்றால் போகவேண்டியதுதானே" என்றார்.உடனே கலைஞர் "அவருக்கு வந்தால் நீர் ஏன் அய்யா வாய் திறக்கிறீர் " என்றார். கிண்டல் செய்த உறுப்பினர் உட்பட சிரித்து விட்டார்கள்!

அதெல்லாம் அந்தக்காலம்!

எழுதியவர் : கோவை ஆனந்த்! (5-Dec-12, 7:38 am)
சேர்த்தது : s.m.aanand
பார்வை : 153

மேலே