நெஞ்சில் வேல் பாய்கிறது

கடை வீதியில்
திரியும்
அந்த கன்னிக்கு
மனநலம் மந்தம்
காப்பாற்ற யாருமில்லை

பரட்டை தலை
பரிதவிக்கும் கண்கள்
உடைகூட சில சமயம்
உடலில் இருக்காது

அந்த பெண்ணை
காப்பாற்ற வேண்டாம்
ஆடை குலைந்து
அந்த அபலை அலையும் போது
அவள் அரை நிர்வாணத்தை
ஆடவர்கள் ரசிக்கும் பொது
வேதனையில் துடிக்கிறது
நெஞ்சில் வேல் வந்து பாய்கிறது

எழுதியவர் : (5-Dec-12, 7:42 am)
சேர்த்தது : m arun
பார்வை : 170

மேலே