என் உயிர் அம்மா ...

என் உயிரின்
ஊற்றுக் கண்ணாய்த் திகழும்
ஆத்மாவின் ஆதாரமே !
என் இரத்த நாளங்களில்
என்றும் ஓடுவது
உந்தன் உதிரமே !
என் இதயத்தின்
சுவாசமாக இருப்பதும்
நீ கொடுத்த மூச்சுக்காற்றே !
என் உள்ளம் என்றும்
உந்தன் பெயரைச்
சொல்லிச் சொல்லி துடிக்கிறதே !
என்றென்றும் உந்தன்
பாதம் பணிவேன்
பாலகனாய் நானும் !