வாங்க பேசலாம் - கே.எஸ்.கலை
ரொம்ப நாள் ஆச்சி தளத்துல பதிவு போட்டு....
தமிழ் நாட்ட ஒரு சுத்து சுத்திட்டு வந்ததால மண்ட குழம்பி போய் இருக்குது...அதுனால கவித எழுத கொஞ்சம் நேரம் தேவ படுது....
அது தா கொஞ்சம் உங்களோட உக்காந்து பேசிற்றுக்கலாம்னு தோணுச்சி..
எதோ பேச போறேன்..கேளுங்க. இப்டி அடிக்கடி ஒங்களோட வந்து பேசணும்னு ரொம்ப நாளா ஒரு ஆச...
ம்ம்ம்ம்...
ஜூலை ஒண்ணாம் தேதி(2012) இந்த எழுத்து தளத்துக்கு வந்து இப்போ சரியா நாளு மாசம் ஆகுது...
தளத்துக்கு வாரப்ப எனக்கு ரொம்ப கவித எழுத தெரியாதுங்க...(இப்ப மட்டும் என்னவாம்னு கேக்குறிங்க..ஓகே ஓகே)...
எதோ வந்த நேரத்துல எழுதுனத விட கொஞ்சம் இப்ப நல்லா எழுதுறேன்னு ஒரு நெனப்பு எனக்கு....
இப்டி என்னுட்டு கவிதைகள கொஞ்சம் தரமானதா ஆக்குறதுக்கு சத்தியமா உங்களப் போல கூட்டாளிக குடுத்த ஊக்கமும் வாழ்த்தும் தாங்க காரணமா இருந்துச்சி...அத என்னைக்கும் மறக்க மாட்டே...
தளத்துக்கு வந்த புதுசுல வெறும் காதல் கவிதைகள எழுதிக்கிட்டு சொந்தமா புள்ளி போட்டுக்கிட்டு...(ஹிஹிஹிஹி அது தாங்க மதிப்பெண்....) இருந்தவன் தாங்க நானும்...
ஓ....
இப்டி சும்மா “சொந்தமா புள்ளி போட்டுக்கிட்டேனு” சொன்னா எப்டி? தெளிவா சொல்றேன் கேளுங்க...
நா தளத்துக்கு வாரத்துக்கு மொதல்ல பேஸ்புக்ல கிறுக்கிக்கிட்டு போஸ்ட் போட்டு சும்மா அங்கவுள்ள கூட்டாளிகளோட வம்பு பண்ணிக்கிட்டு இருந்தே...
தளத்துக்கு வந்ததும்...கவிதைனு எதயோ கிறுக்கி போட்டுட்டு இருந்தே...
ஒரு நாள் சும்மா “சிறந்த படைப்புக்கள்” பட்டியல பாத்தே...என்னுட்டு கவித 49ம் எடத்துல இருந்துச்சி....எனக்கு ஒரே குஷி....ஒடனே கஜனிக்கு கால் பண்ணி சொல்லிட்டு ரொம்ப பெரும பட்டுக்கிட்டு இருந்தே...(ஏற்கனவே சொல்லிருக்கேன்ல...என்ன தளத்துல தள்ளி விட்ட ஆளு இவங்க தானு...)
அப்ப தா எப்டி இந்த கவிதைக பட்டியலுக்கு வருதுன்னு தேடிகிட்டு இருந்தே....
நா அந்த நேரம் நெனச்சே தளத்துல நம்ம கவிதைக முன்னுக்கு வரணும்னா நம்ம அதுக்கு புள்ளி பிச்ச எடுக்கணும் போல...அது தாங்க இந்த டீவீகலுல போடுவாங்களே எஸ்.எம்.எஸ். போட சொல்லி நம்பர் குடுத்து கேப்பாங்களே அந்த மாதி நாமளும் கூட்டாளிகளுக்கிட்ட கேக்கணும், நமக்கு மாக்ஸ் வார மாதிரி என்ன செய்ய முடியுமோ எல்லாத்தையும் செஞ்சா தா இந்த போட்டில ஜெயிக்க முடியும் போலன்னு நெனசிக்கிற்றுந்தே....
அந்த நேரத்துல ஒரு கூட்டாளி கால் பண்ணிற ஏலாதுங்க எனக்கு...
ஒடனே மச்சான் நா ஒரு கவித போட்டில சேந்திருக்கெண்டா...அதுக்கு நா சொல்லுற மாதி நீ “ஸ்டார் வோட்டிங்” குடுக்கணும்.. அப்ப தான் எனக்கு வின் பண்ண ஏலும்..அப்டி இப்டினு கொஞ்சம் வெளங்கப் படுத்திட்டு கவிதைக்கான “லிங்க்” அனுப்பிருவேன்....
“எழுத்து தளம்னா என்னான்னு” கேட்டவிங்க தான் கூட இருந்தானுங்க...
அப்புறம் “எப்டி மச்சான் இதுல வோட்டிங் பண்ணுறது”ன்னு கேப்பானுங்க...
நா சொல்லுவே...
“மச்சான் அந்த கவிதைக்கு கீழ பாரு மஞ்ச கலருல நச்சத்திரம் அஞ்சி இருக்கு தானே... அதுல “அஞ்சாவது” நச்சத்திரத்த பிரஸ் பண்ணு... “நன்றி”னு வந்ததும் சொல்லு அடுத்த லிங்க் அனுபுறே”னு சொல்லுவேங்க....
நாம தான் பாசக் கார புள்ளைகலாச்சே...பயலுக புள்ளகளும் சொன்னத கரெக்டா செஞ்சிருவாங்க....
அப்புறம் பேஸ்புக் ல Chat பண்ண யாரு வந்தாலும் இதே கெதி தான். லிங்க் அனுப்புவேன் மாக்ஸ் போட்ட பெறகு தான் எப்டி நல்லா இருகிங்லானு கேப்பேன்....பேசுவேன்...!
அப்புறம் வெளில எங்கயாவது போறப்ப “நெட் கபே” ஏதும் கண்ணுல பட்டுட்டா போச்சி ஒடனே ஒரு அஞ்சி நிமிஷம் உக்காந்து எல்லா கவிதைகளுக்கும் நானே மாக்ஸ் போட்டுகிட்டு பட்டியலுள எப்டி நம்ம ரேங்கிங் இருக்குனு பாத்துட்டு ப்ரியாவுக்கும் கஜனிக்கும் கால் பண்ணி சொல்லி பெரும பட்டுக்குவேன்...
இப்டியே கள்ள வோட்டு போட்டு போட்டு சிறந்த படைப்புக்கள் பட்டியலுல முதல் அஞ்சி கவிதைகளும் எனனுட்டா இருக்கத பாத்தா மனசுல ஒரு பயம் வந்துருச்சி....எங்கயோ தப்பு நடக்குதுன்னு புரிஞ்சிகிட்டே...ஏன்னா என்னவிட எவ்ளவோ நல்லா எழுதி இருக்க கூட்டாளிகளுட்டு கவிதகளலெல்லாம் என்னுட்டு குப்ப கவிதைகளுக்குப் பின்னால இருக்கதபாத்தா மனசு கேக்கல...
அப்புறம் தான் பொள்ளாச்சி அபி சாருக்கு ஒரு விடுகை அனுப்பி கேட்டேன்
“சார் இந்த மதிப்பெண் பத்தி கொஞ்சம் சொல்லுங்கலேன்னு...” அவரும் எனக்கு விசயத்த தெளிவா சொல்லி தந்தாரு....அன்னயோட விட்டுடே.
இந்த மாதிரி கள்ள வோட்டு போடக் கூடாது. நாம விஷயம் தெரியாம பெரிய தப்பு பண்ணிக்கிட்டு இருந்து இருக்கோம்னு புரிஞ்சிகிட்டேன்....மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சிங்க....
ஆனா அந்த கால கட்டத்துல யாருமே என்கிட்ட கேக்கல “எப்டி உன்னுட்டு கவிதைக மட்டும் இப்டி முதல் இடத்துக்கு வருதுன்னு” கேட்டிருந்தா எப்டி மாக்ஸ் போடுறதுனு கருத்துப் பதிவுலையே தெளிவா சொல்லி இருப்பேங்க...ஏன்னா நா செய்றது தப்புன்னு எனக்கு தெரியாது.
இப்டி இன்னும் தளத்துல கவித எழுதி மாக்ஸ் போட்டுக்குறவங்க நெறைய பேரு இருக்காங்க..ஆனா யாராவது கேட்டா பெரிய காரணமெல்லாம் சொல்றாங்க...அதுகள பாத்தா சிரிப்போட கலந்த கோவம் வருதுங்க எனக்கு இப்ப....
நா எதுக்கு இத இங்க சொல்லுறேன்னு ஒங்க எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்னு நினைக்குறே....இத வாசிச்சிட்டு என்ன பத்தி நீங்க எப்டி நெனச்சிக்கிட்டாலும் பரவால.....
ஒங்களுல யாராவது இந்த மாதிரி செஞ்சிருந்தா கருத்து பதிவுல சொல்லுவிங்கலா?
தவறு செய்யாத யாருமே இல்லைங்க..செய்றது தவறுன்னு தெரிஞ்ச பெறகு அத திருத்திக்கனும்....ஒரு சில விசயங்களுக்கு கொஞ்சம் நாள் போகலாம் ஆனா இந்த மாதிரி விசயங்கள ஒடனே திருத்திக்கலாங்க...
இந்த விசயத்த இந்தியா போயிருந்த நேரத்துல ராஜ்கமல் வீட்டுல இருக்கப்போ, அபி சாரோட பேசிக்கிட்டு இருந்தே..இத எல்லாருக்கும் சொல்லணும்னு தோணிச்சி அது தாங்க சொல்லிட்டேன்....
இன்னொரு நாளைக்கு பேசுறேன் ஒங்களோட...
-----------------------------------------------------தொடரும்---