!!!==(( நெற்றிப்பரப்பில் ஒற்றை நாணயம் ))==!!!
எதுவும் நமக்கு சொந்தமில்லை
என்றும் இவ்வாழ்க்கை நிரந்தரமில்லை
எதிர்காலத்தை நினைத்து-நீ
எந்நாளும் அஞ்சாதே
வாழ்கின்ற வாழ்க்கையிலே
வளர்த்துக்கொள் தன்னம்பிக்கையை
வஞ்சனையின்றி உழைத்தால்
வளர்சிகள் எளிதாகும்
மற்றவருக்காக உன்னை
மாற்றிக் கொள்ளதே
மாற்றம் தேவையானால்
மாற்றிக்கொள் உனக்காக
தவறுகளை தெரிந்துகொள்
தண்டனையை அறிந்துகொள்
தவறுகளை உரசினால்
தண்டனைக்கு இரையாவாய்
பாய்ந்தோடும்
பந்தயக் குதிரையாய் இரு
பரிசுகளை வெல்வதற்கல்ல
பகைவனை வீழ்த்துவதற்கே
ஒவ்வொரு நாளும் புதுமை தான்
ஒன்றை மட்டும் மனதில் கொள்
ஓயாமல் நாம் உழைத்தாலும்-இறுதியில்
நெற்றிப்பரப்பில் ஒற்றை நாணயம்