வெற்றிக்கு வித்திடும் அறிவுகள் ஆறு.
படைபினத்தை விட்டுவிடு.
படைத்தவனை இறைவனென்று
இறையச்சம் இதயம் கொண்டு
இனி(ய) வாழ்வை தொடங்கிவிடு!
வானகத்து வானவர்கள்
மண்ணகத்து மாந்தர்கட்கு
நன்மையினை அள்ளித்தர
செம்மையாய் பயன்படுத்து!
இறைவனின் திருஅருளால்
மறையினை நன்குணர்ந்து
நேரான வழியின்பால்
நிமிர்ந்து நீ நடைபோடு!
இம்மையில் வழிகாட்ட
இறைதூதர் பலர் கண்டோம்
அவர்தம் அறிவுரைக்கு
அடிபணிய கற்றுக்கொள்!
மறுமை நாள் வந்துவிடும்
மறுக்காதே மறக்காதே
அந்தநாள் ஆண்டவன்முன்
அனைவர்க்கும் கேள்வி உண்டு!
சதிகளை முறியடித்து
மதியால் நீ வெற்றிகொள்-முயன்ற பின்
எது வாழ்வில் நடந்தாலும்
விதி என்று ஒப்புக்கொள்!